புடின் எந்தவொரு இலக்குகளையும் அடையவில்லை: புடினை கிண்டல் செய்த ஜெலென்ஸ்கி

1 Min Read

நான்கு ஆண்டுகளாக நடைபெறும் இந்த போரில் புடின் எந்தவொரு இலக்குகளையும் அடையவில்லை என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

4 ம் ஆண்டை நிறைவு செய்த உக்ரைன்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது இன்றுடன் 4 வது ஆண்டை நிறைவு செய்கிறது.

இந்த தினத்தை முன்னிட்டு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய டெலிகிராம் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் உக்ரைன் மீதான போர் நடவடிக்கை தொடர்பான ரஷ்யாவின் ஆரம்ப கால திட்டங்கள் படுதோல்வி அடைந்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

புடின் எந்தவொரு இலக்குகளையும் அடையவில்லை: புடினை கிண்டல் செய்த ஜெலென்ஸ்கி | Zelenskyy Mocked Putin Over Russia War Predictions

மேலும் அந்த செய்தியில், “நான்கு நாட்களில் உக்ரைனிய தலைநகர் கீவ்வை ரஷ்யா கைப்பற்றி இன்றுடன் நான்கு ஆண்டுகள் ஆகிறது” என்று புடினின் திட்டங்களை கிண்டல் செய்தும் ஜெலென்ஸ்கி கருத்து பதிவிட்டுள்ளார்.

புடின் இலக்குகளை அடைய வில்லை

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் புடின் எந்தவொரு நோக்கங்களையும் அடையவில்லை, அதே நேரத்தில் புடினால் உக்ரைனிய மக்களின் மன உறுதி மற்றும் நாட்டின் இறையாண்மையையும் சிதைக்க முடியவில்லை என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாங்கள் எங்கள் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாத்தோம், தோல்வியடையவில்லை என்பதை சொல்ல எங்களுக்கு முழு உரிமை உண்டு, புடினால் உக்ரைனியர்களை உடைக்கவும் முடியவில்லை, போரில் வெற்றி பெறவும் முடியவில்லை என்று ஜெலென்ஸ்கி அதில் தெரிவித்துள்ளார்.

இக்கட்டான காலகட்டத்தில் நாட்டு மக்களின் மன உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் கடின உழைப்பையும் ஜெலென்ஸ்கி வெகுவாக பாராட்டியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *