சீனாவிற்கு எண்ணெய் விற்பனை… எப்ஸ்டீனுக்காக ஆண்ட்ரூ மேற்கொண்ட ரகசிய ஒப்பந்தம்

2 Min Read

சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ வர்த்தகப் பயணத்தில், தனது நண்பருக்காக ரகசிய எண்ணெய் விற்பனை ஒப்பந்தத்திற்கும் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ செயல்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டன் கணக்கில் பணம்

இந்த விவகாரம் தொடர்பில் அம்பலமாகியுள்ள மின்னஞ்சல்களில், பொதுமக்கள் வரிப்பணத்தில் சீனா பயணம் மேற்கொண்ட ஆண்ட்ரூ, எவ்வாறு சுய லாபத்திற்காக செயல்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

சீனாவிற்கு எண்ணெய் விற்பனை... எப்ஸ்டீனுக்காக ஆண்ட்ரூ மேற்கொண்ட ரகசிய ஒப்பந்தம் | Andrew Broker Private Oil Deal

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் டன் கணக்கில் பணம் சம்பாதிக்கும் நம்பிக்கையில், தனது முதன்மையான உதவியாளருடன் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளார்.

ஆண்ட்ரூவும் அவரது ஆலோசகர் டேவிட் ஸ்டெர்னும், 2010 செப்டம்பரில் பத்து நாள் பயணத்திற்கு முன்னும் பின்னும் சீன அரசுக்குச் சொந்தமான பல பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள எண்ணெய் நிறுவனத்துடன் வணிகம் செய்ய ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, ​​பிரித்தானிய வர்த்தகத் தூதராக தனது அதிகாரப்பூர்வ கடமைகளின் ஒரு பகுதியாக, ஆண்ட்ரூ பெய்ஜிங்கில் எண்ணெய் நிறுவனத்தின் தலைவருடன் மதிய உணவும் அருந்தியுள்ளார்.

2001 மற்றும் 2011 க்கு இடையில் உலகம் முழுவதும் முன்னெடுக்கும் பயணங்களில் பிரித்தானிய வணிகத்தை ஊக்குவிப்பதும் முதலீட்டை ஈர்ப்பதும் வர்த்தக தூதராக ஆண்ட்ரூவின் பங்காகும்.

சாரா பெர்குசன்

ஆனால், உத்தியோகப்பூர்வ பயணங்களுக்கு இடையே, தமது நண்பர்களுக்காகவும் ரகசிய ஒப்பந்தங்களுக்கு ஆண்ட்ரூ முயன்றுள்ளார். சீனாவுக்கான 10 நாட்கள் பயணத்தில், பாதிக்கும் மேலான நாட்கள் அவர் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றினார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

அதில், 23 வயது சீன மொடல் Miya Muqi என்பவருடன் பழகியதும், எப்ஸ்டீன் ஒருங்கிணைத்த வர்த்தக சந்திப்புகளிலும் ஆண்ட்ரூ பங்கேற்றுள்ளதும் நெறிமுறை மீறல் என்றே கூறுகின்றனர்.

சீனாவிற்கு எண்ணெய் விற்பனை... எப்ஸ்டீனுக்காக ஆண்ட்ரூ மேற்கொண்ட ரகசிய ஒப்பந்தம் | Andrew Broker Private Oil Deal

பிரித்தானியாவிற்கான 10 நாட்கள் சீன பயணத்திற்கு பிறகு, நைஜீரியா எண்ணெய் மற்றும் அதை சீனாவிற்கு விற்கும் ரகசிய ஒப்பந்தம் ஊடாக ஆண்ட்ரூவின் முன்னள் மனைவி சாரா பெர்குசன் சுமார் 6 மில்லியன் டொலர் ஆதாயம் ஈட்டியுள்ளார்.

அதேவேளை ஆண்ட்ரூவின் ஆலோசகர் டேவிட் ஸ்டெர்ன் பகிர்ந்துகொண்ட தகவலில், சீன எண்ணெய் நிறுவனத்திற்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே 400 மில்லியன் டொலர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *