ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் கொடூர தாக்குதல்! சரியான பதிலடி கொடுப்போம் என சூளுரை

1 Min Read

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் தாக்குதல்

தங்கள் நாட்டில் நடந்த தாக்குதல்களுக்கு, ஆப்கானிஸ்தானின் நிலப்பகுதி பயன்படுத்தப்படுகிறது என பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

pakistan airstrike on afghanistan 17 killed

ஆனால் ஆப்கானிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தது. என்றாலும் பதிலடி தரப்படும் என பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் மீது விமான படையைக் கொண்டு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

pakistan airstrike on afghanistan 17 killed

17 பேர் பலி

இரவோடு இரவாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் உயிரிழந்துள்ளனர்.

பெஹ்சுத் மாவட்டத்தில் மட்டும் 11 குழந்தைகள் உட்பட 17 பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கிறது. அரசு செய்தித் தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதல் குறித்து கூறுகையில், ” சர்வதேச சட்டம் மற்றும் நல்ல அண்டை நாடுகளின் கொள்கைகளை இது மீறுவதாக உள்ளது. பொதுமக்கள் மற்றும் மதத் தலங்களை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு சரியான நேரத்தில் அளவிடப்பட்ட மற்றும் பொருத்தமான பதிலடி கொடுப்போம்” என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த தாக்குதலால் இரு நாடுகளின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

pakistan airstrike on afghanistan 17 killed

pakistan airstrike on afghanistan 17 killed

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *