உச்ச நீதிமன்றத்தால் காயம்பட்ட ட்ரம்ப்… கோபத்தை ஈரான் மீது காட்டலாம்: கசிந்த தகவல்

1 Min Read

உச்ச நீதிமன்றம் தனது வரிக் கொள்கைகளை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்ததன் மீதான டொனால்ட் ட்ரம்பின் கோபம், ஈரான் மீதான இராணுவத் தாக்குதலுக்கு காரணமாகலாம் என முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தடுக்கும் ஒரு ஒப்பந்தம்

ஈரான் விவகாரத்தில் பல நாட்களாக ஆலோசகர்களுடன் தீவிரமாகப் பேசி வரும் ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க மரபுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

உச்ச நீதிமன்றத்தால் காயம்பட்ட ட்ரம்ப்... கோபத்தை ஈரான் மீது காட்டலாம்: கசிந்த தகவல் | Tariff Humiliation To Attack Iran

மட்டுமின்றி, அமெரிக்க இராணுவம் டசின் கணக்கான போர் விமானம் மற்றும் போர் கப்பல்களை அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பி வருகிறது.

இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக சமீபத்திய வாரங்களில் ஈரானின் அணுசக்தி செறிவூட்டலைத் தடுக்கும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க ட்ரம்ப் முயன்றார், ஆனால் ஈரான் நிர்வாகம் அதன் பின்னணியை உணர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்பதைக் கண்டறிந்துள்ளார்.

இந்த நிலையில், தனது மிக முக்கியமான உலகளாவிய வரி விதிப்பு கொள்கைக்கு ஏற்பட்ட அடியைத் தொடர்ந்து, ட்ரம்ப் தற்போது மத்திய கிழக்கு நாட்டைத் தாக்க அதிக வாய்ப்புள்ளது என்று முன்னாள் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் நம்புகிறார்.

இந்த பின்னடைவை அவர் ஏற்றுக்கொள்வதாக தாம் நினைக்கவில்லை என்றும், ஈரானுக்கு எதிராகப் பின்வாங்குவதையும் பார்க்க முடியாது என்றார்.

உச்ச நீதிமன்றத்தால் காயம்பட்ட ட்ரம்ப்... கோபத்தை ஈரான் மீது காட்டலாம்: கசிந்த தகவல் | Tariff Humiliation To Attack Iran

 தாக்குதல்களை முன்னெடுக்க

ஈரான் மற்றும் வெனிசுலாவில் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகளின் வெற்றி இருந்தபோதிலும், ட்ரம்ப் இன்னும் போரை விட ராஜதந்திரத்தை விரும்புகிறார் என்றே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முழு அளவிலான போருக்கு மாறாக, ஈரான் மீது மிரட்டல் விடுக்கப்படும் வகையில் வரையறுக்கப்பட்ட தாக்குதல்களை முன்னெடுக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தால் காயம்பட்ட ட்ரம்ப்... கோபத்தை ஈரான் மீது காட்டலாம்: கசிந்த தகவல் | Tariff Humiliation To Attack Iran

மேலும், இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த தூண்டக் கூடும் என்றும் ட்ரம்பின் ஆலோசகர்கள் நம்புகின்றனர்.

10 நாட்களுக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்கா ஈரானை குண்டுவீசித் தாக்கக்கூடும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *