ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட 2000 உக்ரைனிய சிறுவர்கள்: ஜெலென்ஸ்கி அளித்த உறுதி

1 Min Read

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து சுமார் 2000 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட 2000 சிறுவர்கள்

பிரிங் கிட்ஸ் பேக் யுஏ(Bring Kids Back UA) என்ற திட்டத்தின் கீழ், ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 2000 சிறுவர்கள் பத்திரமாக நாடு திரும்பி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தன்னுடைய டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட 2000 உக்ரைனிய சிறுவர்கள்: ஜெலென்ஸ்கி அளித்த உறுதி | 2000 Ukraine Children Rescued From Russia

அரசு அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், மற்றும் சர்வதேச நட்பு நாடுகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் குழந்தைகள் மீட்பு சாத்தியமாகி இருப்பதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ஜெலென்ஸ்கி உருக்கம்

குழந்தைகள் மீட்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “நாடு திரும்பியுள்ள ஒவ்வொரு குழந்தையும் நம்முடைய அயராத உழைப்பால் திரும்பியுள்ளனர்.

ரஷ்யாவின் பிடியில் இன்னும் ஆயிரக்கணக்கான உக்ரைனிய சிறுவர்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொருவரும் மீட்கப்படும் வரை இந்த மீட்புப் பணி ஓயாது என்று ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

அத்துடன் நாம் கடக்க வேண்டிய பாதை இன்னும் நீண்ட தூரம் இருப்பதாகவும், கடினமானது என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *