எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்திய இளம்பெண்ணொருவர் குறித்த தகவல்

1 Min Read

அமெரிக்க நீதித்துறை, வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் நபர் தொடர்பிலான ஆவணங்களை எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் பெயரில் வெளியிட்டுவருவது அனைவரும் அறிந்ததே.

எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்திய இளம்பெண்ணொருவர் குறித்த தகவல் | Indian Girl Name As Victim In Epstein Files

இந்நிலையில், அந்த ஆவணங்கள், எப்ஸ்டீனால் இந்திய இளம்பெண்ணொருவர் பாதிக்கப்பட்ட விடயம் குறித்து வெளிப்படுத்தியுள்ளன.

எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்திய இளம்பெண்ணொருவர்

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி, அமெரிக்க அதிகாரி ஒருவர் தன் சக ஊழியர் ஒருவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் இந்திய இளம்பெண்ணொருவரைக் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்திய இளம்பெண்ணொருவர் குறித்த தகவல் | Indian Girl Name As Victim In Epstein Files

அந்த அதிகாரி, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களில் ஒருவர் இந்தியாவில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவரது முகவரி கிடைத்தால், இந்திய தூதரகம் வாயிலாக அவருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நீதித்துறை, சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களில் ஒன்றில் இந்த மின்னஞ்சல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *