ஈரான் வான்வெளியைத் தவிர்க்க… ஐரோப்பிய ஒன்றிய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

1 Min Read

எதிர்வரும் மார்ச் 31 வரை ஈரானின் வான்வெளியில் இருந்து விலகி இருக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய போக்குவரத்துப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தது.

எச்சரிக்கை

ஈரான் மீதான நெருக்கடியை நாளுக்கு நாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்து வருகிறார். ஒரு பக்கம், ஈரானுடன் அணு சக்தி தொடர்பில் பேச்சுவார்த்தையும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஈரான் வான்வெளியைத் தவிர்க்க... ஐரோப்பிய ஒன்றிய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் | Eu Airlines To Avoid Iran Airspace

மட்டுமின்றி, ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை ஒரு ஒப்பந்தத்தில் முடிய வாய்ப்பிருப்பதால், அதை சீர்குலைக்கும் திட்டங்களுடன் இஸ்ரேலும் களமிறங்கியுள்ளது.

ஈரான் தொடர்பில் தமது உளவுத்துறை தரவுகளை பகிர்ந்துகொள்ள புதன்கிழமை ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இந்த நிலையிலேயே, ஏற்கனவே அமுலில் இருந்த எச்சரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய போக்குவரத்துப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் நீட்டித்துள்ளது.

அதிக ஆபத்து

அத்துடன், பல்வேறு வகையான ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பு மற்றும் சாத்தியமான பயன்பாடு, நாடுகளின் கணிக்க முடியாத பதிலடிகளால், அனைத்து உயரங்களிலும் விமான நிலைகளிலும் இயக்கப்படும் சிவில் விமானங்களுக்கு அதிக ஆபத்தை உருவாக்குகிறது என ஐரோப்பிய ஒன்றிய போக்குவரத்துப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் வான்வெளியைத் தவிர்க்க... ஐரோப்பிய ஒன்றிய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் | Eu Airlines To Avoid Iran Airspace

இதனிடையே, எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் சூளுரைத்துள்ளது, மேலும் அண்டை நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டால் அவர்களும் தங்கள் கோபத்திற்கு இலக்காக நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *