எரிபொருள் நெருக்கடியின் இடையில் கியூபாவுக்கான விமானங்களை நிறுத்தி, சுற்றுலாப் பயணிகளை ரஷ்ய விமான நிறுவனங்கள் வெளியேற்றின.
எரிபொருள் நெருக்கடி
கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் நாடுகள் மீது கூடுதல் கட்டணங்களை விதிக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன் விளைவாக, கியூபாவின் ஜெட் எரிபொருள் நெருக்கடி மற்றும் பிற முக்கியமான எரிசக்தி விநியோக இடையூறுகள் ஏற்பட்டன.
கடல்சார் போக்குவரத்து கண்காணிப்பு நிபுணர்கள், கியூபாவிற்கு எந்த வெளிநாட்டு எரிபொருள் அல்லது எண்ணெய் டேங்கரும் வரவில்லை என்று AFPயிடம் கூறினார்.
வெளியேற்றிய விமான நிறுவனம்
இந்த நிலையில், கியூபாவின் எரிபொருள் நெருக்கடியால் அந்நாட்டிற்கான விமானங்களை நிறுத்தி, சுற்றுலாப் பயணிகளை ரஷ்ய விமான நிறுவனங்கள் வெளியேற்றின.
ரஷ்யாவின் சிவில் விமான நிறுவனமான Rosaviatsia, “கியூபாவில் எரிபொருள் நிரப்புவதில் உள்ள சவால்கள் காரணமாக, நான்காவது பெரிய விமான நிறுவனமான Rossiya-வும், 7வது பெரிய விமான நிறுவனமானNordwind-வும் தங்கள் விமான வழித்தடங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என தெரிவித்துள்ளது.






