திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் – அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ்

1 Min Read

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் திடீரென தீ விபத்து நிகழ்ந்ததன் பின்னணியில், வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் சதி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர்

மத்திய கிழக்கு கடற்பரப்பில் அமெரிக்கா தனது போர் கப்பல்களை குவித்து வரும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடிக்கும் என கருதப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3 ஆம் திகதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் அதிகம் கூடும் ஜன்னத் பஜாரில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. அடர்த்தியான கரும்புகை வானை நோக்கி எழுந்தது.

திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் | External Plot Behind Tehran Fire Iran Sleeper Cell

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.

இதே போல், கடந்த வாரத்தில் ஈரானில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் உள்ளிட்ட சில பகுதிகளில் வெடிப்பு நிகழ்ந்தது. எரிவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து என ஈரான் அரசு தெரிவித்தது.

ஆனால், வெடிப்பு நிகழ்ந்த கட்டிடத்தை பார்க்கும் போது எரிவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து போல் தோன்றவில்லை.

இது உண்மையாகவே எரிவாயு கசிவால் ஏற்பட்ட விபத்தா அல்லது வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ்

ஒருவேளை இதன் பின்னணியில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் சதி இருந்தால், வெளிநாட்டில் உள்ள ஈரானின் ஸ்லீப்பர் செல்களும் இது போன்ற திட்டத்தை கையிலெடுப்பார்கள்.

பிரித்தானிய மற்றும் அமெரிக்காவில் ஏற்கனேவே ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஏராளமான ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் | External Plot Behind Tehran Fire Iran Sleeper Cell

ஒருவேளை ஈரான் அமெரிக்கா இடையே மோதல் வெடித்தால், அந்த மோதல் மத்திய கிழக்கில் மட்டும் நடைபெறாது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஊடுருவியுள்ள ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் அசம்பாவித சம்பவங்களை மேற்கொள்வார்கள் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் விளக்கமாக பேசியுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *