ரஷ்ய சைபர் தாக்குதல்களை முறியடித்துவிட்டோம் – இத்தாலி

1 Min Read

குளிர்கால ஒலிம்பிக்குடன் தொடர்புடைய வலைத்தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட ரஷ்ய சைபர் தாக்குல்களை முறியடித்துவிட்டதாக இத்தாலி தெரிவித்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக்

இத்தாலியின் மிலனில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 6ஆம் திகதி தொடங்குகிறது.

italy says thwarted of russian cyberattacks

இதன் தொடக்க விழாவில் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வேன்ஸ் உட்பட வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரங்களில் ஒன்றான கோர்டினா டி’அம்பெஸ்ஸோவில் உள்ள பல ஹொட்டல்களைத் தாக்கியதாக Noname057 என்ற ரஷ்ய சார்பு குழு தெரிவித்தது. ஆனால், இந்த தாக்குதல்களின் அலையை முறியடித்ததாக இத்தாலி கூறியுள்ளது.

இத்தாலியின் வெளிநாட்டு வெளியுறவு அமைச்சர் அன்டோனியா தஜானி (Antonio Tajani) கூறுகையில்,

“வெளிநாடுகளில் உள்ள இத்தாலிய வெளியுறவு அமைச்சக அலுவலகங்களையும், ரிசார்ட் நகரமான கோர்டினா டி’அம்பெஸ்ஸோவில் உள்ள ஹொட்டல்கள் போன்ற ஒலிம்பிக் தொடர்பான தளங்களையும் ஹேக்கர்கள் தாக்கினர்” என்றார்.

மேலும், சுமார் 120 தளங்கள் பாதிக்கப்பட்டன; ஆனால் தாக்குதல்கள் திறம்பட நடுநிலையாக்கப்பட்டன என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை

அதே சமயம் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தகவல் தொடர்பு இயக்குநர் மார்க் ஆடம்ஸ் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையில், ரஷ்ய சார்பு ஹேக்கர் குழு இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றதுடன் இத்தாலி உக்ரைனுக்கு அளித்த ஆதரவிற்கு பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியது.

அத்துடன் அந்த குழுவிற்கு சொந்தமான டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “உக்ரேனிய பயங்கரவாதிகளை” ஆதரிப்பது பரவலாக்கப்பட்ட சேவை மறுப்பு தாக்குதல்களால் தண்டிக்கப்படும் என்று எச்சரித்தது.

italy says thwarted of russian cyberattacks

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *