நிரந்தர குடியுரிமை இருந்தாலும் வெளிநாட்டினருக்கு வணிக கடன் கிடையாது: டிரம்ப் அதிரடி!

1 Min Read

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று இருந்தாலும் வெளிநாட்டினருக்கு இனி வணிக கடன் வழங்கப்படாது என டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.

கிரீன் கார்டு வைத்திருந்தாலும் வணிக கடன் கிடையாது

அமெரிக்காவில் எதிர்வரும் மார்ச் 1ம் திகதி முதல் சட்டப்பூர்வமான நிரந்தர குடியுரிமை வைத்து இருப்பவர்களுக்கும்(Green Card Holders) இனி வணிக கடன் வழங்கப்படாது என அமெரிக்க சிறு தொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” என்ற பொருளாதார கொள்கையை செயல்படுத்தி வருகிறார்.

நிரந்தர குடியுரிமை இருந்தாலும் வெளிநாட்டினருக்கு வணிக கடன் கிடையாது: டிரம்ப் அதிரடி! | Green Card Holder Will Not Eligible For Loan In Us

அதன்படி, வணிக கடன் விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுக உரிமையாளராக நூறு சதவீத அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது அமெரிக்க தேசியவாதியாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வைத்துள்ள வெளிநாட்டினர்கள் இனி வணிக கடன் வாங்க முடியாது.

வெளிநாட்டினரோ அல்லது நிரந்தர குடியுரிமை வைத்து இருப்பவரோ இதற்கு முன்னதாக ஒரு நிறுவனத்தின் 5% பங்குகள் வரை வைத்து இருக்க முடியும். ஆனால் அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது பெரிய நாடு இந்தியா

அமெரிக்காவில் அதிக நிரந்தர குடியுரிமை வைத்துள்ளவர்களின்(Green Card) பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக சபை வெளியிட்ட ஜூன் 2025 புள்ளிவிவரங்களின் படி, அமெரிக்காவின் சிறு தொழில் உரிமையாளர்கள் 40% வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *