போர் கப்பலை குறிவைத்த ஈரானிய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்க படைகள்

1 Min Read

ஈரானிய ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிவைக்கப்பட்ட அமெரிக்க கப்பல்

அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டிருந்த USS ஆபிரகாம் லிங்கன் போர் கப்பலை நெருங்கி வந்த ஈரானிய ஆளில்லாத ட்ரோன் விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலை அமெரிக்க கடற்படை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

இந்த தாக்குதலை ஈரானிய புரட்சிகர காவல் படையின் X தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு ட்ரோன்கள்

முதலில் அனுப்பப்பட்ட ஆளில்லாத ட்ரோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, ஈரான் மீண்டும் இரண்டு ஆளில்லா டிரோன் விமானங்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க தங்களது இராணுவ போர் கப்பலை நிலை நிறுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால், பின்னர் அது பிராந்திய போராக வெடிக்கும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

அதே சமயம் அமெரிக்கா – ஈரான் இடையே திரைமறைவு அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *