சவுதி அரேபியாவை அடுத்து… ஈரானுக்கு ஆதரவாக முடிவெடுத்த இன்னொரு மத்திய கிழக்கு நாடு

2 Min Read

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவை அடுத்து மத்திய கிழக்கு நாடான ஜோர்டானும் ஈரானுக்கு ஆதரவான முடிவெடுத்துள்ளது.

அனுமதிப்பதில்லை

சவுதி அரேபியாவில் இருந்து ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படாது என பட்டத்து இளவரசர் சல்மான் உறுதி அளித்திருந்தார்.

சவுதி அரேபியாவை அடுத்து... ஈரானுக்கு ஆதரவாக முடிவெடுத்த இன்னொரு மத்திய கிழக்கு நாடு | Any Military Action Against Iran

அத்துடன், வேறு எந்த நாட்டில் இருந்தும் சவுதி வான் பரப்பு வழியாக தாக்குதல் நடத்தவும் அனுமதிப்பதில்லை என்றும் சல்மான் தெரிவித்திருந்தார். தற்போது அதே முடிவை ஜோர்டானும் அறிவித்துள்ளது.

ஜோர்டானின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் திங்களன்று தனது ஈரானிய பிரதிநிதியிடம், இஸ்லாமிய குடியரசின் மீது தாக்குதல்களை நடத்த தங்களது பிரதேசத்தையோ அல்லது வான்வெளியையோ பயன்படுத்த ஜோர்டான் அனுமதிக்காது என்று உறுதியளித்தார்.

எந்தவொரு பிராந்திய மோதலிலும் ஜோர்டான் ஒரு போர்க்களமாக இருக்காது அல்லது ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளுக்கும் ஒரு ஏவுதளமாக அமையாது என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சியிடம் தொலைபேசியில் அய்மன் சஃபாடி உறுதி அளித்துள்ளார்.

மட்டுமின்றி, ஜோர்டான் தங்களது வான்வெளியை மீறவோ அல்லது அதன் பாதுகாப்பிற்கும் குடிமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தவோ எந்தவொரு தரப்பையும் அனுமதிக்காது என்றும் சஃபாடி தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மீது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வரும் நிலையில், அணு சக்தி ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க ஈரானை ட்ரம்ப் நிர்வாகம் நெருக்கி வரும் நிலையிலேயே ஜோர்டான் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், ஈரானில் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் மிக மோசமான முடிவுக்கு வந்துள்ளதும் அமெரிக்காவை தலையிடத் தூண்டியுள்ளது. ஆனால், ஈரானில் நடந்த வன்முறை மற்றும் போராட்டங்களின் பின்னணியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இருப்பதாகவே ஈரான் கூறி வருகிறது.

சவுதி அரேபியாவை அடுத்து... ஈரானுக்கு ஆதரவாக முடிவெடுத்த இன்னொரு மத்திய கிழக்கு நாடு | Any Military Action Against Iran

ஈரானை மொத்தமாக சீர்குலைக்கும் முடிவுடன் இஸ்ரேல் தொடர்ந்து போராடி வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானை நெருக்கடிக்கு தள்ளி வருகிறது. இந்த நிலையிலேயே சவுதி அரேபியாவும் தற்போது ஜோர்டானும் ஈரானுக்கு ஆதரவாக வாக்குறுதி அளித்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *