இந்த ஆண்டில் திருமணம் செய்தால் ரூ.12 லட்சம் பரிசு – தொழிலதிபர் அறிவிப்பு

1 Min Read

இந்த ஆண்டில் திருமணம் செய்யும் ஊழியர்களுக்கு ரூ.12 லட்சம் வழங்குவதாக தொழிலதிபர் ஒருவர் அறிவித்துள்ளார்.

துபாய் தொழிலதிபர்

உலகளவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர், அதிகரித்து வரும் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக திருமணம் செய்வது மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.

பல்வேறு நாடுகளும் திருமணம் செய்வது மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், மானியம் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டில் திருமணம் செய்தால் ரூ.12 லட்சம் பரிசு - தொழிலதிபர் அறிவிப்பு | Billionaire Gift 12 Lakhs For Employees Marriage

அதேபோல், துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில், அல் ஹப்தூர் குழுமம் 1970 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த குழுமம் ஹொட்டல்கள், கார்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள் ஆகிய தொழில்களை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

குழந்தை பெற்றால் ரூ.25 லட்சம்

இந்த அல் ஹப்தூர் குழும தலைவர் கலஃப் அஹ்மத் அல் ஹப்தூர், சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு 50,000 DHR (இந்திய மதிப்பில் ரூ.12.5 லட்சம்) மற்றும் குழந்தை பெற்றுக்கொண்டால் இரு மடங்காக ரூ.25 லட்சம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *