2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: முதலிடம் யாருக்கு?

1 Min Read

2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்த ஆண்டும் சிங்கப்பூர்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்

Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.

2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: முதலிடம் யாருக்கு? | Singapore Top In 2026 World Most Powerful Passport

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

அவ்வகையில், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்த ஆண்டும் சிங்கப்பூர்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: முதலிடம் யாருக்கு? | Singapore Top In 2026 World Most Powerful Passport

சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்கு பயணிக்கலாம்.

2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: முதலிடம் யாருக்கு? | Singapore Top In 2026 World Most Powerful Passport

இரண்டாம் இடத்தை இரண்டு நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன. அவை, ஜப்பானும் தென்கொரியாவும். கடந்த ஆண்டில், தென்கொரியா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியா, ஜப்பான் பாஸ்போர்ட்கள் மூலம் விசா இல்லாமல் 188 நாடுகளுக்கு பயணிக்கலாம்.

பட்டியலில் மூன்றாவது இடத்தை ஐந்து நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன. அவையாவன, டென்மார்க், லக்ஸம்பர்க், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஆகும்.

பட்டியலில் பிரித்தானியா ஏழாவது இடத்திலும், கனடா எட்டாவது இடத்திலும் உள்ள நிலையில், கடந்த ஆண்டு டாப் 10 நாடுகள் பட்டியலில் இடத்தைத் தவறவிட்ட அமெரிக்கா, இம்முறை பட்டியலில் 10ஆவது இடத்தைப் பிடித்துவிட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *