தைவானில் ரிக்டர் 6.1 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வீதியில் தஞ்சமடைந்த பொதுமக்கள்

0 Min Read

தைவானில் ரிக்டர் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தைவான் நிலநடுக்கம்

தைவான் நாட்டின் தென்கிழக்கு பகுதியான தைதுங் கடலோர கவுண்டி பகுதியில் ரிக்டர் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

மேலும் நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள், மற்றும் வணிக வளாகங்கள் பலமாக குலுங்கின, மேலும் கடைகளில் விற்பனைக்கான வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தரையில் விழுந்து சிதறின.

இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *