இந்தோனேசியாவுடன் இன்று இலங்கை அணி பலப்பரீட்சை

1 Min Read

மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் இந்தோனேசியாவுக்கு எதிரான பி குழு போட்டியில் பங்களாதேஷ் அணி 71 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று முன்தினம் (31) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. செபானா மொஸ்டாரி அதிகபட்சம் 42 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும் பதிலெடுத்தாடிய இந்தோனேசியா 17.3 ஓவர்களில் 58 ஓட்டங்களுக்கே சுருண்டது. அந்த அணியில் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீராங்கனையாக மரியா கொராசோன் 12 ஓட்டங்களைச் சேர்த்தார். பந்து வீச்சில் நஹிதா அக்தர் 3 விக்கெட்டுகளைப் பதம்பார்த்தார். எவ்வாறாயினும் பி குழு புள்ளிப் பட்டியலில் இலங்கை மகளிர் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதோடு இன்று (03) இந்தோனேசியாவை எதிர்கொள்ளவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *