அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இதுவரை சுமார் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த18ஆம் திகதி நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.அதற்கு எதிராக எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் சங்கங்களும், சிவில் அமைப்புகள் சிலவும் சட்டமூலத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.அதேவேளை, ஆளும் தரப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி உள்ளிட்ட சில தரப்பினர் சட்டமூலத்திற்கு ஆதரவாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்துள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து இன்று உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்;அனைத்து மனுதாரர்களும் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை இன்று தாக்கல் செய்யவுள்ளனர். இப்பிரச்சினையை உயர் நீதிமன்றத்தினால் மாத்திரம் தீர்மானிக்க முடியாது என்பதே அனைத்து மனுதாரர்களினதும் கோரிக்கையாகும்.ஏனெனில், உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கே இந்தத் திருத்தத்தின் மூலம் நேரடியாக நன்மை கிடைக்கக்கூடிய நிலை உள்ளது. ‘ஒருவர் தனது சொந்த வழக்கைத் தானே விசாரிக்கக் கூடாது’ என்ற அடிப்படை சட்டக் கோட்பாடே இதன் மூலம் வெளிப்படையாக மீறப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர், ஆதரவு மனுக்களை தாக்கல் செய்ய கால அவகாசம்

By

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
