பூட்டானில் நடைபெறவுள்ள உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் (Global Conscious Food Systems) உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) , இலங்கையிலிருந்து பூட்டான் நோக்கிப் புறப்படவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, பிரதமர் அமரசூரிய செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதி நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின் ஆரம்ப பொது அமர்வில் கலந்துகொள்வதுடன், “Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis” (தருணத்திற்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்) எனும் தலைப்பில் தலைமை உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
அத்தோடு, நிலைத்திருக்கக்கூடிய உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் மீள்திறன் மிக்க சமூகங்களுக்கான ஒத்துழைப்பைப் பலப்படுத்துதல் தொடர்பாக, சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடல்களிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.




