பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று காணாமல்போனவர்களில் 35 வயதுடைய பெண் ஒருவரினதும், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடலில் நீரில் மூழ்கி காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




