நாட்டில், ஒரேயொரு மாற்றுத் தரப்பாக ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே காணப்படுவதாகவும் விவசாயத்தை மேம்படுத்தி கைத்தொழில் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதூடாக உற்பத்தித் தொழில்களை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அநுராதபுரம், மதவெச்சிய, யகாவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;
தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர். பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்களால் இலட்சக்கணக்கானமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். நாளாந்தம் மூன்று வேளை உணவைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
கிராமத்தை கட்டியெழுப்பி, நகரங்களை உருவாக்கி, நாட்டை கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவை எமக்கு பெற்றுத் தாருங்கள்.இவ்வாறான நிலைமைகளை மாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.




