செப்டம்பரில் மூன்று இலட்சம் படையினரை திரட்டும் ரஷ்யா

1 Min Read

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செப்டம்பரில் 300,000 பேரை புதிதாகப் படைக்கு திரட்டவிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

டொனெட்ஸ்கில் எஞ்சியிருக்கும் பகுதிகளைக் கைப்பற்ற மொஸ்கோ மேலும் படை வீரர்களைக் கட்டாயமாகச் சேர்க்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ரஷ்யத் தேர்தல்களுக்குப் பிறகு, விளாடிமிர் புட்டின் இப்படைத் திரட்டலை கட்டாயமாக முன்னெடுப்பார் எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

டொனெட்ஸ்கின் சுமார் 80 சதவீதப் பகுதியை மொஸ்கோ தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, எஞ்சிய பகுதியைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதனால் பல மாதங்களாக ரஷ்யா முன்னேறி வரும் கோட்டைப் பகுதி உட்பட உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு புதிய படைத்திரட்டல் ரஷ்யாவுக்கு உதவக்கூடும் என்று அதிகாரிகள் குறிப்பிடடுள்ளனர்.

டெலிகிராப்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *