உசைன் போல்ட்டின் 100 மீற்றர் உலக சாதனையை முறியடித்து சீனாவின் மனித உருவ ரோபோ சாதனை படைத்துள்ளது. சீனாவின் பீஜிங்கில் 2ஆவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 16 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 56 ரோபோக்கள் இதில் பங்கேற்றுள்ளன. இதன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ‘ஹோனர்’ உருவாக்கியுள்ள ரோபோ, வெறும் 9.32 விநாடிகளில் 100 மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு, பெர்லினில் நடந்த உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட் 100 மீற்றர் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்ததே மனிதர்களின் உலக சாதனையாக இருந்து வருகிறது.‘லைட்னிங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிவேக ரோபோ, பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை (22) ஆரம்பித்த இந்த ரோபோ விளையாட்டுப் போட்டிக்கான முன்னோட்ட சோதனையின்போது இச்சாதனையைப் படைத்துள்ளது.




