China’s unitree superman Humanoid robot surpasses Usain Bolt top speed: உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட்டின் வேகத்தை சீனாவின் “சூப்பர்மேன் ரோபோ” மிஞ்சியுள்ளது.
சீனாவின் புதிய “சூப்பர்மேன்” ரோபோ
சீனாவின் ரோபாட்டிக்ஸ் நிறுவனமான யூனிட்ரீ(Unitree), சூப்பர்மேன்(Superman) என்ற புதிய மனித ரோபோவை அறிமுகப்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில், 0.85 மீட்டர் நீளமுள்ள கால்களை கொண்ட இந்த “சூப்பர்மேன்” ரோபோ வினாடிக்கு 45.6 கி.மீ வேகத்தில் ஓடவும், சுமார் 2 மீட்டர் தூரம் வரை தாவி குதிக்கவும் செய்து அசத்தியுள்ளது.

வினாடிக்கு 45.6 கிலோ.மீ வேகத்தில் ஓடும் இந்த ரோபோ ஒலிம்பிக்கில் பலமுறை தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட்டின் வேகத்தை இது மிஞ்சியுள்ளது.
மேலும் உசைன் போல்ட்டின் வேகம் போட்டிகளின் போது பதிவு செய்யப்பட்டவை என்றும், ஆனால் இந்த ரோபோவின் வேகம் யூனிட்ரீ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது பெறப்பட்டது என்று விவாதம் ஆகியுள்ளது.




