இந்த ஆண்டில் 1,605 வீதி விபத்துகள்; 1,693 பேர் உயிரிழப்பு

1 Min Read

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 1,605 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 1,693 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 555 பேர் பாதசாரிகள் என்றும் 603 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 119 பேர் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள், 115 பேர் சைக்கிள் ஓட்டுநர்கள், 136 பேர் வாகன சாரதிகள் மற்றும் 162 பேர் சாதாரண பயணிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் சிறியளவு குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *