தெவிநுவர உத்தபலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹரவை முன்னிட்டு இடம்பெற்றிருந்த காவடி ஊர்வலத்தில்,போதைப்பொருள் வைத்திருந்த சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கமைய நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை முன்னிட்டு ஏற்கெனவே பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.சுமார் 1500 பாதுகாப்பு படையினர் இங்கு கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள் நடத்திய சோதனையிலே, போதையில் காவடி ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டனர். ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த சகலரும் பொலிஸாரின் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த கோவிலுக்கு அருகாமையில், அண்மையில் பாதாளக் குழுக்களுக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, காவடி குழுக்களின் பங்கேற்பை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பரிந்துரைத்திருந்தார். எனினும், நேற்றுமுன்தினம் (27) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர், அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகள் பங்கேற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், கடந்த ஆண்டுகளில் காவடி நடனத்தில் பங்கேற்ற அனைத்து குழுக்களும் இவ்வாண்டும் பெரஹரவில் பங்கேற்க அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது.இதனால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்,தெவிநுவர உத்தபலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த காவடி ஊர்வலம் நடைபெற்றது.இதில் பங்கேற்றிருந்த சகலரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.இச்சோதனை நடவடிக்கையிலே,போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் போதைப்பாவனைக்குட்பட்டிருந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருட்களுடன் காவடி ஊர்வலத்தில் பங்கேற்றோர் கைது

By

xr:d:DAFPA4-cxsE:254,j:45122182118,t:23011304
Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
