நேட்டோ பயிற்சி பணியில் உளவு பார்த்த இளைஞர்: கனேடிய நபரை கைது செய்த அதிகாரிகள்

1 Min Read

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடா நாட்டைச் சேர்ந்த நபர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உளவு பார்த்த நபர் கைது

கனடா நாட்டைச் சேர்ந்த சீன வம்சாவளி இளைஞர் ஒருவர், பெல்ஜியத்தில் நேட்டோ அமைப்பின் இன்டர்ன்ஷிப்(Internship) பயிற்சி பணியின் போது உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மான்ஸ் நகரில் உள்ள நேட்டோவின் உச்ச தலைமையகத்தின் Allied Powers Europe-ல் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் உளவு பார்த்தது தொடர்பான சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக பெடரல் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேட்டோ பயிற்சி பணியில் உளவு பார்த்த இளைஞர்: கனேடிய நபரை கைது செய்த அதிகாரிகள் | Nato Arrested Intern Man In Belgium

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்

கைது செய்யப்பட்ட நபர் மீது மூன்றாம் நாடுகளின் ஒன்றுக்கு உளவு பார்த்தல், குற்றவியல் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

SHAPE அமைப்பின் பாதுகாப்பு அதிகாரிகளே சந்தேக நபரின் மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிந்ததாகவும், பின்னர் பெல்ஜியத்தின் பொதுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை சந்தேக நபரின் வீடு மற்றும் பணிபுரியும் இடங்களில் சோதனை நடைபெற்றது.

சோதனைக்கு பிறகு சந்தேக நபரை கைது செய்வதற்கான பிடிவாரண்டை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *