அபூர்வ மருத்துவ பிரச்சினையால் வெளிநாட்டில் இந்தியர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பம்

1 Min Read

அமெரிக்காவில் வாழ்ந்துவந்த மென்பொருள் பொறியாளரான இந்தியர் ஒருவர், அபூர்வ மருத்துவ பிரச்சினை ஒன்றின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் இந்தியர் மரணம்

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் வாழ்ந்து வந்தவர், வெங்கட ரவிதேஜா ரவிபதி (34).

அபூர்வ மருத்துவ பிரச்சினையால் வெளிநாட்டில் இந்தியர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பம் | Indian Techie Dies In Us Rare Aortic Dissection

கடந்த வாரம், ரவிக்கு திடீரென இடது காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வலி அப்படியே நெஞ்சு வரை பரவ, உடனடியாக அவரது குடும்பத்தினர் அவசர உதவியை அழைத்துள்ளனர்.மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ’Type A Aortic Dissection’ என்னும் அபூர்வ பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

திடீரென ரவி இப்படி ஒரு அபூர்வ பிரச்சினையால் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ரவிக்கு 26 வயதில் மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *