மத்திய கிழக்கின் யுத்த நிலைமை மிகவும் பாரதூரமானதாக உள்ள நிலையில், அதன் தீவிரத்தைக் குறைத்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கு கனடா நேற்று அழைப்பு விடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸில் நடைபெறும் ஆசியான் நாடுகள் வௌியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்குபற்றியுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தென்சீனக் கடலில் நிலவும் பதற்றங்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைய தீர்ப்பதற்கான கனடாவின் ஆதரவையும் இக்கூட்டங்களின் போது அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனக் கப்பல்களுக்கு இடையிலான சமீபத்திய மோதல் குறித்து அவர் கவலையும் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ளது. கனடா தீவிரத்தை குறைக்கவும், போர்நிறுத்தம், மனிதாபிமான கருத்துக்கள் மற்றும் மனித வாழ்க்கைக்கு மதிப்பளிக்கவும் எப்போதும் அழைப்பு விடுக்கும். மோதல் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மேசையின் ஊடாக நிரந்தர யுத்த நிறுத்தம் மற்றும் அமைதியை உறுதிசெய்வர் என்று நாங்கள் நம்புகிறோம்’ எனவும் கூறியுள்ளார்.
ரொய்ட்டர்ஸ்




