பிபா தலைவர் ஜ.நா.வின் அடுத்த செயலாளராக வேண்டும் – ட்ரம்ப்

1 Min Read

உதைப்பந்தாட்ட சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனமான பிபாவின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலாளராக வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாக நிவ்யோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ட்ரம்புடன் நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி நிவ்யோர்க் போஸ்ட் வௌியிட்டுள்ள செய்தியில், பிபா தலைவர் உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் மதிக்கப்படுபவர் என்றும், மக்களை ஒன்றிணைக்கும் சிறப்புத் திறன் அவருக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் தற்போதைய பொதுச்செயலாளரான அந்தோனியோ குட்டரெஸ் எதிர்வரும் டிசம்பரில் பதவி விலகவுள்ளார். இந்த நிலையில் ட்ரம்பின் இந்த விருப்பம் வெளியாகியுள்ளது.

ஆனால் ஐ.நா. பொதுச் செயலாளராக ஆவதற்கு பொதுச் சபையில் இருந்து உறுதிப்படுத்தலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அங்கீகாரமும் அவசியமானது.

குட்டரெஸின் பதவிக்கான தற்போதைய போட்டியாளர்களில் சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிச்செல் பேச்லெட்வும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரஃபேல் கிராஸ்ஸியும் இடம்பெற்றுள்ளனர்.

டெலிகிராப்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *