இந்திய இளையோர் அணி முதல் நாளில் 253 ஓட்டம்

1 Min Read

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் முதல்இன்னிங்ஸை ஆடும் இந்திய இளையோர் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 253 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதனத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணியின் முதல் இரு விக்கெட்டுகளையும் டக் அவுட் செய்வதற்கு இலங்கை பந்துவீச்சாளர்களால் முடிந்தது.

லக்ஷியா ரைசந்தானி ஓட்டம் இன்றி செத்மிக்க செனவிரத்னவின் பந்துக்கு ஆட்டமிழந்ததோடு மறுமுனையில் சகர் விர்க்கின் விக்கெட்டை ஓட்டம் பெறும் முன்னரே கிம்ஹான் மெண்டிஸ் வீழ்த்தினார். எனினும் சுதாகரித்து ஆடிய குஷக்ரா (ஆட்டமிழக்காது 103) மற்றும் அணித் தலைவர் யஷ்பர்தான் சௌஹான் (78) இரண்டாது விக்கெட்டுக்கு 120 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். அடுத்து வந்த மனால் சௌஹானும் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது இந்திய இளையோர் அணி 65 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *