சீ ஹோக்ஸ் வெற்றி ஆரம்பம்

1 Min Read

இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சுப்பர் லீக்  தொடரில் நேற்று (20) நடைபெற்ற ரெட் ஸ்டார் அணிக்கு எதிரான போட்டியில் சீ ஹோக்ஸ் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவில் சீ ஹோக்ஸ் அணிக்காக மொஹமட் ஹஸ்மீர் கோல் புகுத்தினார்.

50 ஆவது நிமிடத்தில் பெற்றப்பட்ட அந்த கோல் வெற்றி கோலாகவும் அமைந்தது.  இந்தப் போட்டியுடன் பத்து அணிகள் பங்கேற்றிருக்கும் சுப்பர் லீக் தொடரில் அனைத்து அணிகளும் தனது முதல் ஆட்டத்தை ஆடி முடித்துள்ளன.

இதில் நேற்றை வெற்றியுடன் சீ ஹோக்ஸ் அணி 3 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த அணியை விடவும் கோல் வித்தியாசத்தில் அப் கன்ட்ரி லயன்ஸ் மற்றும் ரினோன் அணிகள் முறையே முதல் இரு இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *