அமெரிக்க இராணுவத்தினருக்கு ஹோமோர்ன் சோதனை

1 Min Read

30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இராணுவத்தினர் டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டிற்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் அறிவித்துள்ளார்.

தங்களது வருடாந்த சுகாதாரப் பரிசோதனைகளின் ஒரு பகுதியாக அவர்கள் இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இராணுவத்தினரின் மிகச் சிறந்த செயல்பாட்டிற்குத் தேவையான டெஸ்டோஸ்டிரோனை சரியான அளவில் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான இப்பரிசோதனைத் திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்ததாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொளியில் கூறியுள்ளார்.

குறைந்தளவு டெஸ்டோஸ்டிரோனைக் கொண்ட வீரர்களுக்கு, விருப்பத்தின் பேரில் ஹோர்மோன் மாற்று சிகிச்சை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், எங்கள் வீரர்களுக்கு உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவையை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களது நீண்டகால ஆரோக்கியத்தைப் பேணுவது என்பது வாழ்நாள் முழுவதும் வலிமையானவராகவும், திறமையானவராகவும் இருப்பதை உறுதி செய்வதாகும். அப்போது ஒய்வு பெற்ற பின்னரும் அவர்களால் நீண்ட காலம் செழித்து வாழ முடியும்’ என்று கூறியுள்ளார்.

டெஸ்டோஸ்டிரோன் என்பது இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி, தசை வளர்ச்சி, எலும்பு அடர்த்தி மற்றும் பாலுணர்வு ஆகியவற்றிற்கு அவசியமான ஒரு முதன்மை பாலியல் ஹோர்மோன் ஆகும். பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *