பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் ஆர்ஜன்டீன அணி இத்தாலி (1934, 1948) மற்றும் பிரேசில் (1958, 1962) அணிகளுக்கு அடுத்து உலகக் கிண்ணத்தை தொடர்ச்சியாக இரு முறை வென்ற அணியாக சாதனை படைக்க முயற்சிக்கவுள்ளது.
உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிஃபா தரவரிசையில் ஆர்ஜன்டீனா முதல் இடத்திலும் ஸ்பெயின் இரண்டாம் இடத்திலும் இருந்தன. 1992 இல் தரவரிசை முறை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் அதில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது இது தான் முதல்முறையகும்.
ஆர்ஜன்டீனா தனது 7ஆவது உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதோடு தொடர்ச்சியாக தகுதி பெற்றிருப்பது இது முதல் முறையாகும். இதன்படி ஜெர்மனிக்கு அடுத்து (8) அதிகமுறை உலகக் கிண்ண இறுதிக்கு தகுதிபெற்ற அணியாக பிரேசிலுடன் அது இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.
இம்முறை உலகக் கண்ணத்தில் அதிக கோல்கள் பெற்றவர் வரிசையில் கிலியன் எம்பப்பே உடன் மெஸ்ஸி முதல் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இருவரும் தலா 8 கோல்களை பெற்றுள்ளனர். அத்துடன் மெஸ்ஸி கோல் உதவிகள் செய்ததில் (4) இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த உலகக் கிண்ணத்தில் கோல் உதவிகளில் முதலிடத்தை பெற மெஸ்ஸிக்கு ஒரு பங்களிப்பு மாத்திரமே குறைவாக இருந்தது. ஒற்றை உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் மற்றும் அதிக கோல் உதவிகள் பெற்றவராக தோமஸ் முல்லர் உள்ளார். 2010 உலகக் கிண்ணத்தில் அவர் அந்த சாதனையை படைத்திருந்தார்.




