சுகாதார சேவையில் ஆளணி வளங்களை வலுப்படுத்தல்; 228 பேருக்கு இன்று நியமனம்

1 Min Read

சுகாதார சேவையில் ஆளணி வளங்களை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், 228 அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களுக்கு இன்று (16) நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸதவின் தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரி நிறுவனத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.இந்நிலையில்,அடுத்த பதினைந்து நாட்களுக்குள் மேலும் 1,778 சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர்கள், டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் சிறு சேவை நிர்வாக பணியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் இலவச சுகாதார அமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கும், மருத்துவமனை அமைப்பை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவதற்கும், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளைத் தடையின்றிப் பராமரிப்பதற்கும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல்களின் கீழ், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஒரு திட்டமிடப்பட்ட செயல்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.சுகாதாரத் துறையில் நீண்ட காலத்திற்குப் பின்னர், சுகாதார உதவியாளர்கள் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்பும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மேல் மாகாணத்தில் 627 சுகாதார உதவியாளர்களைக் கொண்ட முதல் தொகுதி நியமிக்கப்பட்டது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் இக்குழு நியமிக்கப்பட்டது.சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, பல்வேறு பிரிவுகளின் கீழ் எஞ்சியுள்ள சுகாதார உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

இதன்படி, 18ஆம் திகதி 600 சுகாதார உதவியாளர்களுக்கும், ஒகஸ்ட் 01ஆம் திகதி மேலும் 762 சுகாதார உதவியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, அடுத்த பதினைந்து நாட்களுக்குள் 295 டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களையும் 121 சிறு சேவைகள் நிர்வாகிகளையும் நியமிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இந்த மனிதவள மேம்பாட்டுத் திட்டம், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் நேரடி அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *