இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த இலங்கை ஏ அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரையும் 0–1 என இழந்தது.
காலி சர்வதேச அரங்கில் நடைபெற்ற இந்த நான்கு நாள் போட்டியின் கடைசி நாளான நேற்று (05) இந்திய ஏ அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 33 ஓட்ட வெற்றி இலக்கை அந்த அணி 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலகுவாக எட்டியது.
இந்தப் போட்டியில் இலங்கை ஏ அணி முதல் இன்னிங்ஸில் 366 ஓட்டங்களை பெற்றபோதும் இந்திய ஏ அணி தனது முதல் இன்னிஸுக்காக 543 ஓட்டங்களை பெற்று ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இலங்கை ஏ அணி 177 ஓட்டங்களால் பின்தங்கியே இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. எவ்வாறாயினும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 209 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன்போது அஷேன் பண்டார மாத்திரமே அரைச் சதத்தைக் கடந்து 87 ஓட்டங்களைப் பெற்றார்.




