நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக முறையானதும் விரிவானதுமான விசாரணை நடத்தி, சம்பவத்திற்குக் காரணமான விடயங்கள், அதனைத் தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதவாறு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக விசாரணைக் குழுவொன்றை நியமிக்க இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மிலிந்த குணதிலக அவர்கள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் அவர்கள் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த குழு, சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களையும் விரிவாக விசாரணை செய்து, தனது பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது.




