வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு

1 Min Read

இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அந்த வழக்கு தொடர்பில் மோசமாக விமர்சித்த பெண் மருத்துவர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வருங்கால கணவனை கொலை செய்த பெண்

மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும் சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: பெண் மருத்துவர் பணியிடைநீக்கம் | Dentist Suspended For Mock Ketan Agarwal Death

இந்நிலையில், தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடைய உதவியுடன் அவரை பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்தார்.

பெண் மருத்துவர் பணியிடைநீக்கம்

இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான முஸ்கன் சோனி என்னும் பெண், கொல்லப்பட்ட கேத்தனைக் குறித்து மோசமாக விமர்சித்து சமூக ஊடகம் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: பெண் மருத்துவர் பணியிடைநீக்கம் | Dentist Suspended For Mock Ketan Agarwal Death

நான் ஆண்களை வெறுக்கிறேன் என்னும் ஹேஷ்டேகுடன் சோனி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ’அந்த பூனேக்கார நபருக்கு தலையில் முடியே இல்லை, இப்படி பொய்களைச் சொன்னால் சாகவேண்டியதுதான்’ என்று கூறியுள்ளார் அவர்.

இந்த வீடியோ கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், அனைத்திந்திய பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பு, பல் மருத்துவர் சோனியை உடனடியாக பணியிடைநீக்கம் செய்துள்ளது.

அந்த அமைப்பில் சோனி காசாளராக இருந்த நிலையில், அவர் காசாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்பின் உறுப்பினரான இருப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் தலைவரான Dr திவாகர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *