பல்கலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து மடிக்கணினிகள்

1 Min Read

பிரதேச செயலகங்கள் ஊடாகக் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி நிதியத்தின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதி நிதியத்தினால் இதற்காக 58 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது.

இதற்கமைய, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் சுமார் 30 மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி நிதியம் இதற்காக மொத்தமாக ரூ. 98 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *