அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள 12.5 சதவீத புதிய வர்த்தக வரியைத் தவிர்ப்பதற்காக, தற்போதைய தொழில் மற்றும் சுங்க நடைமுறைகளை வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தொழிலமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதியமைச்சருமான அணில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இறக்குமதிப் பொருட்களைக் கண்டறிவதற்காக, சுங்கப் பரிசோதனை செயன்முறையை மேம்படுத்தவும், சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருப்பதுடன், முக்கியமாக ஆடை ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.




