மேற்கிந்திய தீவுகள் வளர்ந்து வரும் அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 216 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை வளர்ந்து வரும் அணி இரு போட்டிகளைக் கொண்ட தொடரையும் 1–0 என கைப்பற்றியது.
தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு 322 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் வளர்ந்து வரும் அணி 106 ஓட்டங்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய அசித்த வன்னிநாயக்க 4 விக்கெட்டுகளையும் ஷக்தி உதார 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.
இந்தப் போட்டியில் மேற்கிந்திய வளர்ந்து வரும் அணி முதல் இன்னிங்ஸில் 231 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை வளர்ந்து வரும் அணி முதல் இன்னிஸுக்காக 5 விக்கெட் இழப்புக்கு 553 ஓட்டங்களை பெற்றது.



