தம்புள்ளையில் நடந்த முக்கோண ஒருநாள் தொடரின் போட்டி ஒன்றில் மோதலில் ஈடுபட்ட இலங்கை ஏ அணி வீரர் விஷேன் ஹலம்பகே மற்றும் இந்திய ஏ அணியின் வைபவ் சூர்யவன்சி ஆகியோருக்கு அபராதம் விதிப்பதற்கு போட்டி மத்தியஸ்தர் பரிந்துரைத்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (15) நடைபெற்ற இந்தப் போட்டி முடிவிலேயே இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. கடும் வாக்குவாதத்தை அடுத்து உடல் ரீதியாவும் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பில் மீளாய்வு செய்திருக்கும் போட்டி மத்தியஸ்தர் இருவருக்கு போட்டிக் கட்டணத்தில் தலா 50 வீத அபராதம் விதிக்க பரிந்துரைத்துள்ளார். இது குறித்த அறிக்கையை இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு போட்டி மத்தியஸ்தர் வழங்கியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலினால் (ஐ.சி.சி.) இந்தத் தொடர் நடத்தப்படாத நிலையில், தண்டனை வழங்குவது குறித்த இறுதி முடிவு குறித்த கிரிக்கெட் சபைகள் மற்றும் தொடர் அதிகாரிகளே எடுப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த அபராதம் குறித்து இரு தரப்பு கிரிக்கெட் சபைகள் மற்றும் போட்டி அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.



