அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர் நிறுத்தம் தொடர்பான உடன்பாடுகள் எட்டப்பட்டிருந்த ஒரு சுமுகமான சூழ்நிலைக்கு மத்தியில், ஈரான் வரலாற்றிலேயே முதன்முறையாக இஸ்ரேலை நோக்கி நேரடியாக நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆசிய வர்த்தக சந்தையில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத பாதுகாப்பு அச்சுறுத்தல், உலக நாடுகளுக்கான எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பின்வருமாறு அதிகரித்துள்ளது:
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் 2 முக்கிய குறியீடுகளும் (Benchmarks) ஒரே நாளில் 3% இற்கும் அதிகமான உயர்வைக் கண்டுள்ளன.
சர்வதேச சந்தையின் முக்கிய அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 3.45% ஆல் அதிகரித்து, அமெரிக்க டொலர் 96.30 ஆக உயர்வடைந்துள்ளது.
அமெரிக்க வர்த்தக சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 3.41% ஆல் அதிகரித்து, அமெரிக்க டொலர் 93.85 ஆக உயர்வடைந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்த அசாதாரண போர்ச் சூழல் காரணமாக, எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.



