அனைத்து வகை கிரிக்கெட்டில் ஆட இலங்கை நியூசி. பயணம்

1 Min Read

அனைத்து வகை கிரிக்கெட் தொடருக்காக இலங்கை அணி அடுத்து ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காகவே இலங்கை அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மூன்று ஆண்டுகளின் பின்னரே இலங்கை அணி அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்காக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி 2027 ஜனவரி 16 (நெப்பியர்), 19 (வெலிங்டன்) மற்றும் 22 (டுன்டின்) ஆம் திகதிகளில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இரு அணிகளும் ஆடும் முதல் டி20 போட்டி ஜனவரி 26 ஆம் திகதி கிரிஸ்சேர்ச்சில் நடைபெறவுள்ளது. அடுத்த இரு போட்டிகளும் நெல்சனில் ஜனவரி 29, 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி டவுரங்கா, பே ஓவல் மைதானத்தில் பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *