காசா முழுவதும் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் குறைந்தது மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலாவுக்கு கிழக்கில் வாகனமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.
இத்தாக்குதலால் அந்த வாகனம் பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அருகிலுள்ள ஸவாய்டா நகரில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
வடமேற்கு கான் யூனிஸில் நடந்த இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது முதல் இஸ்ரேலியத் தாக்குதல்களில் சுமார் 930 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



