இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய 3 அதிகாரிகள் வெளியிட்ட செல்ஃபி

1 Min Read

இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், உயிர் தப்பிய 3 அதிகாரிகள் வெளியிட்ட செல்ஃபி தற்போது வைரலாகிவருகிறது.

லடாக்கின் லே பகுதியில், இந்திய இராணுவத்தின் Cheetal ஹெலிகாப்டர் மே 20-ஆம் திகதி மதியம் விபத்துக்குள்ளானது.

இதில் மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா, ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு மேஜர் ஆகிய மூன்று அதிகாரிகள் பயணம் செய்தனர்.

விபத்துக்குப் பிறகு, மூவரும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இரு பைலட்டுகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Ladakh Army helicopter crash, Indian Army Cheetal chopper accident, Major General Sachin Mehta news, Army officers survive Leh crash, Cheetah helicopter safety concerns, HAL Light Utility Helicopter India, Indian Army aviation news #LadakhCrash #IndianArmy #HelicopterAccident #SachinMehta #CheetalChopper #ArmyNews #DefenseIndia

இந்நிலையில், மேஜர் ஜெனரல் மேத்தா விபத்துக்குப் பிறகு எடுத்த செல்ஃபி, தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலானது.

இந்த ஹெலிகாப்டர், பழைய Cheetah மாடலின் மேம்படுத்தப்பட்ட Cheetal வகை ஆகும். இது பிரான்ஸ் Aerospatiale Alouette III வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

Ladakh Army helicopter crash, Indian Army Cheetal chopper accident, Major General Sachin Mehta news, Army officers survive Leh crash, Cheetah helicopter safety concerns, HAL Light Utility Helicopter India, Indian Army aviation news #LadakhCrash #IndianArmy #HelicopterAccident #SachinMehta #CheetalChopper #ArmyNews #DefenseIndia

பல தசாப்தங்களாக, இந்த ஹெலிகாப்டர்கள் லடாக், சியாசின், அருணாச்சலப் பிரதேசம் போன்ற உயரமான பகுதிகளில் படையினர் போக்குவரத்து, மீட்பு பணி, உளவு நடவடிக்கைகள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

ஆனால், இந்த ஹெலிகாப்டர்களுக்கு வயதானதால் பராமரிப்பு சவால்கள் மற்றும் பாதுகாப்பு குறைகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதனால், இந்திய இராணுவம் மற்றும் விமானப் படை, Hindustan Aeronautics Limited (HAL) உருவாக்கிய புதிய Light Utility Helicopter (LUH)-ஐ படிப்படியாக கொண்டு வந்து, பழைய Cheetah மற்றும் Chetak ஹெலிகாப்டர்களை மாற்றும் திட்டத்தில் உள்ளது.

இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய Court of Inquiry அமைக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *