ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றடைந்துள்ளார். சீனாவிற்கு அவர் மேற்கொள்ளும் 25 ஆவது வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் இதுவாகும்.
பீஜிங்கில் உள்ள புகழ்பெற்ற தியானன்மென் சதுக்கத்தில் (Tiananmen Square) ரஷ்யஜனாதிபதிக்கு 21 குண்டுகள் முழங்க பிரம்மாண்டமான இராணுவ அரசு மரியாதை மற்றும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைக்காகச் சென்ற புடினுக்கு, சீன இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையுடன், அங்கு திரண்டிருந்த சிறுவர்கள் மலர்களை அசைத்து உற்சாக வரவேற்பளித்தனர்.



