பலஸ்தீன ஐ.நா. அறிக்கையாளரின் தடையை நீக்கிய அமெரிக்கா

1 Min Read

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனியப் பகுதிக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

காசாவில் இஸ்ரேலின் போருக்கு எதிராகப் பிரசாரம் செய்ததற்காக அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பலரில் அல்பானீஸும் ஒருவராவார்.

இத்தடை அவரது பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக கூட்டாட்சி நீதிபதியொருவர் கூறிய ஒரு வாரத்திற்குப் பிறகு, ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் அல்பானீஸ் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கி இருக்கிறது.

அமெரிக்க திறைசேரி துறை தனது இணைய தளத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான தடை நீக்கம் என்ற தலைப்பின் கீழ் அல்பானீஸின் பெயரைப் பட்டியலிட்டுள்ளது.பலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அல் பானீஸ் பகிரங்கமாகப் பிரசாரம் செய்ததற்கான தண்டனையாகவே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *