சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த அர்ச்சுனா எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும்

1 Min Read

ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்’ எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள் என்றும், அந்தப் போராட்டக் காலங்களில் தமிழினம் பின்னடைவைச் சந்தித்ததற்குச் சகோதர யுத்தங்களும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சூழலில், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் குறிவைத்து, ‘ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்’ எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *