Google அறிமுகப்படுத்திய புதிய Gemini Omni AI., என்ன செய்யும் தெரியுமா?

1 Min Read

Google தனது புதிய Gemini Omni AI மொடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது படம், ஒலி, வீடியோ, உரை போன்ற பல்வேறு உள்ளீடுகளை ஒருங்கிணைத்து, உயர்தர வீடியோக்களை உருவாக்கும் திறன் கொண்டது.

Gemini Omni-யின் சிறப்பு, இயற்கை மொழி வழியாக வீடியோ எடிட்டிங் செய்யும் வசதி. பயனர் உரையாடல் மூலம் வீடியோவில் மாற்றங்களைச் செய்யலாம்.

உதாரணமாக, ஒரு காட்சியில் புதிய கதாபாத்திரங்களை சேர்க்கலாம், சூழலை மாற்றலாம் அல்லது கலைப்பாணியை மாற்றலாம்.

Google Gemini Omni, Gemini Omni Flash AI, AI video editing tool, Google DeepMind Gemini, AI multimodal video creation #Google #GeminiOmni #AI #VideoEditing #DeepMind #ArtificialIntelligence #TechNews #Innovation

இந்த மொடல் Gemini-யின் உலக அறிவையும், இயற்பியல் புரிதலையும் இணைத்து, உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை உருவாக்குகிறது.

காந்தம், திரவ இயக்கவியல் போன்ற இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி, வீடியோக்கள் இயல்பாக தோன்றும்.

மேலும், Gemini Omni Flash எனப்படும் முதல் பதிப்பு தற்போது Gemini App, Google Flow, YouTube Shorts ஆகியவற்றில் அறிமுகமாகியுள்ளது. விரைவில் டெவலப்பர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் API வழியாக வழங்கப்படும்.

பயனர்கள் தங்கள் டிஜிட்டல் அவதாரை உருவாக்கி, தங்களது குரல் மற்றும் தோற்றத்துடன் வீடியோக்களை உருவாக்கலாம். அனைத்து Omni வீடியோக்களும் SynthID watermark மூலம் அடையாளம் காணப்படும்.

Google, இந்த செயற்கை நுண்ணறிவை பாதுகாப்பான முறையில் உருவாக்குவதாகவும், பயனர்களை பாதுகாக்கும் கொள்கைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *